spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎதிர்பார்த்த லெவலுக்கு இருந்ததா?..... 'குட் பேட் அக்லி' திரை விமர்சனம் இதோ!

எதிர்பார்த்த லெவலுக்கு இருந்ததா?….. ‘குட் பேட் அக்லி’ திரை விமர்சனம் இதோ!

-

- Advertisement -

குட் பேட் அக்லி படத்தின் திரைவிமர்சனம்.எதிர்பார்த்த லெவலுக்கு இருந்ததா?..... 'குட் பேட் அக்லி' திரை விமர்சனம் இதோ!

அஜித், திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரபு, யோகி பாபு, பிரியா வாரியர் ஆகியோரின் நடிப்பில் இன்று (ஏப்ரல் 10) உலகம் முழுவதும் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.'குட் பேட் அக்லி' பட ஸ்டைலில் அஜித்தை வாழ்த்திய ரஜினி!

we-r-hiring

இந்தியாவையே நடுங்க வைக்கும் மாஸ் கேங்ஸ்டராக இருக்கும் அஜித்துக்கு அவர் செய்யும் வேலையால் அவருடைய குடும்பத்திற்கு ஆபத்து உண்டாகிறது. இதன் காரணமாக தனக்கு பிறந்த குழந்தையை பார்க்கக் கூடாது என மறுப்பு தெரிவிக்கிறார் திரிஷா.எதிர்பார்த்த லெவலுக்கு இருந்ததா?..... 'குட் பேட் அக்லி' திரை விமர்சனம் இதோ! இதனால் காவல் துறையினரிடம் சரண்டர் ஆகி திருந்தி, 17 வருடங்கள் கழித்து தன்னுடைய மகனை பார்க்க வருகிறார். அந்த சமயத்தில் அர்ஜுன் தாஸ், அஜித்தின் மகனை திட்டம் போட்டு ஜெயிலுக்கு அனுப்புகிறார். இதனால் நல்லவனாக இருந்த அஜித் மீண்டும் கெட்டவனாக மாறுகிறார். அர்ஜுன் தாஸ் எதற்காக அஜித்தின் மகனை ஜெயிலுக்கு அனுப்புகிறார்? ஜெயிலில் இருந்து மகனை மீட்டாரா அஜித்? என்பதுதான் குட் பேட் அக்லி படத்தின் மீதி கதை.எதிர்பார்த்த லெவலுக்கு இருந்ததா?..... 'குட் பேட் அக்லி' திரை விமர்சனம் இதோ!

இந்த படத்தில் அஜித் தனி ஆளாக ஒட்டுமொத்த படத்தையும் தன்னுடைய தோளில் தாங்கி பிடித்திருக்கிறார். படத்தில் அஜித் தோன்றும் காட்சிகளை பார்க்கும்போது ஆதிக் ரவிச்சந்திரன் ஒவ்வொரு காட்சிகளையும் ரசித்து ரசித்து எடுத்திருக்கிறார் என்பது தெரிகிறது. மேலும் அஜித் ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்ட படமாக இருப்பதால் அஜித்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கின்றனர். அதேசமயம் அஜித் மீண்டும் கலகலப்பான கதாபாத்திரத்தில் அனைவரையும் கலாய்த்து ஜாலியாக நடித்திருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது.எதிர்பார்த்த லெவலுக்கு இருந்ததா?..... 'குட் பேட் அக்லி' திரை விமர்சனம் இதோ! அதுமட்டுமில்லாமல் படத்தில் பல சர்ப்ரைஸ்கள் இருப்பது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இரண்டாம் பாதியில் வரும் ஃபிளாஷ்பாக்கில் ஏகப்பட்ட சம்பவங்களை செய்து இருக்கிறார் ஆதிக். அர்ஜுன் தாஸின் பெர்ஃபார்மன்ஸ் பேசப்படுகிறது. அந்த அளவிற்கு வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார். சுனில் மற்றும் பிரசன்னா அஜித்தின் கூடவே சுற்றி வருவதோடு மட்டுமல்லாமல் அவருக்கு பில்டப் கொடுக்கிறார்கள். இந்த படத்தில் இடம் பெற்ற பழைய பாடல்கள், அஜித்தின் ரெஃபரன்ஸ் போன்றவைகள் நிறைய இடங்களில் இடம்பெற்றுள்ளது. ஜிவி பிரகாஷின் இசை, அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட் தான். எதிர்பார்த்த லெவலுக்கு இருந்ததா?..... 'குட் பேட் அக்லி' திரை விமர்சனம் இதோ!இருப்பினும் சில இடங்களில் சத்தம் அதிகமாக இருந்தாலும் அருமையான ஒளிப்பதிவு அதை மேட்ச் செய்து விடுகிறது. மொத்தத்தில் குட் பேட் அக்லி முழுவதும் மாஸ் மொமன்ட் தான். இருப்பினும் எமோஷனல் காட்சிகள் கனெக்ட் ஆகவில்லை. சில இடங்களில் லாஜிக் மிஸ் ஆகிறது. இதை கொஞ்சம் சரி செய்து இருந்தால் படம் அடித்து நொறுக்கி இருக்கும்.

MUST READ