spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஃபேன் பாயின் அடுத்த சம்பவம் ரெடி.... 'குட் பேட் அக்லி' படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பு!

ஃபேன் பாயின் அடுத்த சம்பவம் ரெடி…. ‘குட் பேட் அக்லி’ படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.ஃபேன் பாயின் அடுத்த சம்பவம் ரெடி.... 'குட் பேட் அக்லி' படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பு!

அஜித்தின் 63 வது படமாக உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்திருக்கிறார். அபிநந்தன் ராமானுஜம் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க இவர்களுடன் இணைந்து பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். 'ஃபேன் பாயின் அடுத்த சம்பவம் ரெடி.... 'குட் பேட் அக்லி' படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பு!இந்த படமானது கேங்ஸ்டர் சம்பந்தமான கதைக்களத்தில் அப்பா – மகன் உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் ரசிகர்களுக்கு தரமான விருந்து படைத்த நிலையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. மேலும் இந்த படத்தின் டிரைலர் நேற்று (ஏப்ரல் 3) அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று (ஏப்ரல் 4) இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஃபேன் பாயின் அடுத்த சம்பவம் ரெடி.... 'குட் பேட் அக்லி' படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பு!அஜித்தின் தீவிர ரசிகனான ஆதிக் ரவிச்சந்திரன் டீசரிலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு தீனி போட்டிருந்தார். இந்நிலையில் அவருடைய அடுத்த ஃபேன் பாய் சம்பவத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவுகளும் இன்று தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ