Homeசெய்திகள்சினிமாசசிகுமாருடன் இணைந்து நடிக்கும் 'குட் நைட்' பட நடிகை!

சசிகுமாருடன் இணைந்து நடிக்கும் ‘குட் நைட்’ பட நடிகை!

-

- Advertisement -

நடிகர் சசிகுமார் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக நந்தன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. சசிகுமாருடன் இணைந்து நடிக்கும் 'குட் நைட்' பட நடிகை!அதேசமயம் சசிகுமார், ஃப்ரீடம், எவிடன்ஸ் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் சிம்ரன் உடன் இணைந்து புதிய படம் ஒன்றிலும் நடித்து வருகிறார் சசிகுமார். இதற்கிடையில் இவர், ஜோக்கர் ஜப்பான் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சசிகுமார் உடன் இணைந்து சைத்ரா ஆச்சர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு மதர் இந்தியா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சசிகுமாருடன் இணைந்து நடிக்கும் 'குட் நைட்' பட நடிகை!இந்நிலையில் இந்தப் படம் தொடர்பான புதிய தகவல் ஒன்று அதாவது குட் நைட் படத்தில் நடித்திருந்த மீதா ரகுநாத் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் மணிகண்டன் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் தான் குட் நைட். இந்த படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக மீதா ரகுநாத் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ