Homeசெய்திகள்சினிமாகிங்ஸ்டன் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்!

கிங்ஸ்டன் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்!

-

- Advertisement -

ஜி.வி. பிரகாஷ், கிங்ஸ்டன் இரண்டாம் பாகம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.கிங்ஸ்டன் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்!

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் நடிப்பதிலும் ஆர்வமுடையவர். அந்த வகையில் ஏற்கனவே டார்லிங், பேச்சுலர், அடியே, ரெபல் என பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவரது நடிப்பில் உருவாகியுள்ள இடி முழக்கம் எனும் திரைப்படம் நீண்ட நாட்களாக ரிலீஸ் செய்யப்படாமல் இருக்கிறது. அடுத்தது செல்வராகவன் இயக்கத்தில் மெண்டல் மனதில் எனும் திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் ஜி.வி. பிரகாஷ். இதற்கிடையில் இவரது 25வது படமாக கிங்ஸ்டன் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை கமல் பிரகாஷ் இயக்கி இருக்கிறார். இதனை ஜி.வி. பிரகாஷ் தானே தயாரித்து இசையும் அமைத்துள்ளார். இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து திவ்யபாரதி, சேத்தன், அழகம்பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ளனர். கிங்ஸ்டன் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்!இந்த படமானது இந்தியாவின் முதல் கடல் சாகச படமாகும். இந்த படத்தின் மீதான எதிர்பார்க்கும் மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இப்படம் இன்று (மார்ச் 7) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அப்டேட் கொடுத்திருக்கிறார் ஜி.வி. பிரகாஷ். அதன்படி அவர் கூறியதாவது, “கிங்ஸ்டன் 2 படத்தின் பணிகளை இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் தொடங்கி விடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ