spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகும் 'கிங்ஸ்டன்'.... ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு!

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகும் ‘கிங்ஸ்டன்’…. ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகும் கிங்ஸ்டன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகும் 'கிங்ஸ்டன்'.... ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு!

ஜி.வி. பிரகாஷ் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர். அந்த வகையில் பல பெரிய ஹீரோக்களின் படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். அதே சமயம் இவர் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அதன்படி ஏற்கனவே செல்வராகவன் இயக்கத்தில் மெண்டல் மனதில், சீனு ராமசாமியின் இடி முழக்கம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் ஜி.வி. பிரகாஷ். இதற்கிடையில் இவர், கமல் பிரகாஷ் இயக்கத்தில் கிங்ஸ்டன் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து திவ்யபாரதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை பேரலல் யுனிவர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷே இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார். ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகும் 'கிங்ஸ்டன்'.... ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு!ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து பர்ஸ்ட் லுக் போஸ்டரும், டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து ‘ராசா ராசா’ எனும் முதல் பாடல் வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MUST READ