இயக்குனர் ஹெச். வினோத், ஜனநாயகன் படம் குறித்து பேசி உள்ளார்.
விஜயின் 69 ஆவது படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘ஜனநாயகன்’. இந்த படத்தை ஹெச். வினோத் இயக்க கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்து இருக்கிறது. அனிருத் இதன் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். முழு நேர அரசியல்வாதியாக மாறி இருக்கும் விஜயின் கடைசி படம் இது என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி 2026 ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுதும் திரைக்கு வர உள்ள இந்த படத்தை திருவிழா போல் கொண்டாட ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், முன்னோட்ட வீடியோவும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் தொடர்ந்து பல அப்டேட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் யாரும் பார்த்திராத வகையில் இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் படத்தில் பல சர்ப்ரைஸ்கள் இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.
#HVinoth Recent
– #JanaNayagan will be a pakka farewell movie for #Vijay sir
– Expect a Mass Commercial Action film.#ThalapathyVijaypic.twitter.com/PjX2IQwYSn— Movie Tamil (@_MovieTamil) September 19, 2025

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஹெச். வினோத், சமீபத்தில் நடந்த விழாவில் ‘ஜனநாயகன்’ படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி அவர், “ஜனநாயகன் படம் விஜய் சாருக்கு பக்கா ஃபேர்வெல் படமாக இருக்கும். எனவே மாஸ் கமர்சியல் ஆக்சன் படமாக இதை எதிர்பார்க்கலாம்” என்று கூறியுள்ளார். இது தவிர இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் அடுத்த மாதத்தில் இருந்து தொடங்கும் என தகவல் கசிந்துள்ளது.