spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமகன் போல இருந்தவனை இழந்தது வலி தருகிறது - ஹன்சிகா

மகன் போல இருந்தவனை இழந்தது வலி தருகிறது – ஹன்சிகா

-

- Advertisement -

நடிகை ஹன்சிகா மோத்வானி செல்லமாக வளர்த்து வந்த புரூஸோ என்ற நாய் இறந்து போனது. இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

தமிழில் எங்கேயும் காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஹன்சிகா மோத்வானி, அடுத்தடுத்து மாப்பிள்ளை, வேலாயுதம், வாலு, சிங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய், தனுஷ், ஆர்யா, சிம்பு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் அவர் ஜோடி சேர்ந்துள்ளார். இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு அவர் தனது நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் முடித்துக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து, அண்மையில் அவரது நடிப்பில் பார்ட்னர் என்ற திரைப்படம் வெளியானது. அதில், ஆதிக்கு ஜோடியாக அவர் நடித்திருப்பார். மேலும், சாந்தனு மற்றும் முகின் ராவுடன் இணைந்து இணைய தொடரிலும் அவர் நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு அவர் நடிப்பு மற்றும் தொழில்களிலும் ஆர்வம் செலுத்தி வருகின்றார்.
இந்நிலையில், அவர் நீண்ட நாட்களாக செல்லமாக வளர்த்து வந்த நாய் இறந்து போனது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், எனது மகன் போல் இருந்தாய்..உன்னை இழந்த வலியை வார்த்தைகளால் சொல்ல முடியாது என வேதனையுடன் பதிவிட்டு இருக்கிறார்.

MUST READ