- Advertisement -
நடிகை ஹன்சிகா மோத்வானி செல்லமாக வளர்த்து வந்த புரூஸோ என்ற நாய் இறந்து போனது. இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

தமிழில் எங்கேயும் காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஹன்சிகா மோத்வானி, அடுத்தடுத்து மாப்பிள்ளை, வேலாயுதம், வாலு, சிங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய், தனுஷ், ஆர்யா, சிம்பு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் அவர் ஜோடி சேர்ந்துள்ளார். இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு அவர் தனது நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் முடித்துக் கொண்டார்.



