அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராமர் கோயில் திறப்பு விழா இன்று ஜனவரி 22 பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்வில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். ஸ்ரீ ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலை, கடந்த 18ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. மைசூரை சேர்ந்த அருள் யோகிராஜ் இந்த சிலையை உருவாக்க பல்வேறு பிரபலங்களும் நன்கொடைகள் வழங்கி உள்ளார்கள். அந்த வகையில் தற்போது ஹனுமன் பட குழுவினர் ஸ்ரீ ராமர் கோயிலின் திறப்பிற்காக நன்கொடை வழங்கியுள்ளனர்.
தேஜா சஜ்ஜா நடிப்பில் பிரசாந்த் வர்மா இயக்கியுள்ள படம் தான் ஹனுமன். இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் 115 கோடிக்கு மேல் உலக அளவில் வசூல் செய்து பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியான இந்த படத்தில் வினய் ராய், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
#HANUMAN for SHREE RAM ✨
As announced, Team HanuMan is going to donate a grand sum of ₹2,66,41,055 for 53,28,211 tickets sold so far for Ayodhya Ram Mandir 🤩🙏
A @PrasanthVarma film
🌟ing @tejasajja123#HanuManForShreeRam #HanuManEverywhere… pic.twitter.com/jbWQ5sPhzq— Primeshow Entertainment (@Primeshowtweets) January 21, 2024

ஏற்கனவே இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினரின் சார்பில் நடிகர் சிரஞ்சீவி, ஹனுமன் படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ஐந்து ரூபாய், ஸ்ரீ ராமர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி தற்போது வரை ஹனுமன் படத்திற்காக 55,28,211 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு டிக்கெட்டிற்கு ஐந்து ரூபாய் வீதம் ரூ. 2,66,41,055 பணத்தை ராமர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாக படக்குழுவினர்கள் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.