Homeசெய்திகள்சினிமாஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'ரத்னம்'..... ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு!

ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ரத்னம்’….. ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

பிரபல இயக்குனர் ஹரி, தாமிரபரணி, பூஜை உள்ளிட்ட படங்களுக்கு பிறகு விஷால் நடிப்பில் ரத்னம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'ரத்னம்'..... ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு!மூன்றாவது முறையாக ஹரி, விஷால் கூட்டணி இணைந்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோஸ் நிறுவனமும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். எம் சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மெடிக்கல் மாஃபியா சம்பந்தமான கதைக்களத்தில் ஆக்சன் படமாக இந்த படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி, திருச்சி, வேலூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்து தற்போது படமானது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'ரத்னம்'..... ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு!அதன்படி இந்த படம் வருகின்ற ஏப்ரல் 26 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதைத்தொடர்ந்து பாடல்களும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ