நெட்டிசன்களை விளாசிய லவ்வர் பட நடிகை… கேலிக்கு பதிலடி…
- Advertisement -

அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் உருவான திரைப்படம் லவ்வர். ஜெய்பீம் படம் புகழ் மணிகண்டன் இப்படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இதில் ஸ்ரீ கௌரி பிரியா நாயகியாக நடித்துள்ளார். கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் படத்திற்கு இசை அமைத்துள்ளார். திரைப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம் கடந்த மாதம் 9-ம் தேதி லவ்வர் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.

காதலர்களுக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகளை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஐஷூ என்ற கதாபாத்திரத்தில் ஹரினி என்பவர் நடித்திருந்தார்.

இந்நிலையில், லவ்வர் படத்தில் ஐஷூ என்ற கதாபாத்திரத்தை விமர்சித்தவர்களுக்கு, நடிகை ஹரினி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடிகை ரினி, படத்தில் வரும் கதாபாத்திரம் பிடிக்காததால், சில முட்டாள்கள் என்னை நேரடியாக திட்டுகிறார்கள். ஒரு நடிகையிடம் எப்படி இவர்களால் இழிவாக பேச முடிகிறதது. கருத்துகளை அவமரியாதையுடன் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. கதாபாத்திரத்தை யாரும் சரியாக புரிந்து கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.