spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஒரு குட்டி சர்ப்ரைஸ் ஆன் தி வே.... ஹரிஷ் கல்யாண் கொடுத்த அப்டேட்!

ஒரு குட்டி சர்ப்ரைஸ் ஆன் தி வே…. ஹரிஷ் கல்யாண் கொடுத்த அப்டேட்!

-

- Advertisement -

நடிகர் ஹரிஷ் கல்யாண் புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.ஒரு குட்டி சர்ப்ரைஸ் ஆன் தி வே.... ஹரிஷ் கல்யாண் கொடுத்த அப்டேட்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்த ஹரிஷ் கல்யாண் பியார் பிரேமா காதல், தாராள பிரபு ஆகிய படங்களில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றார். அதைத்தொடர்ந்து பார்க்கிங், லப்பர் பந்து ஆகியவை இவருக்கு அடுத்தடுத்த வெற்றி படங்களாக அமைந்த நிலையில் தமிழ் சினிமாவின் முக்கியமான இளம் நடிகராக மாறினார். ஒரு குட்டி சர்ப்ரைஸ் ஆன் தி வே.... ஹரிஷ் கல்யாண் கொடுத்த அப்டேட்!தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள டீசல் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அதற்கு முன்னதாக இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

we-r-hiring

இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு குட்டி சர்ப்ரைஸ் இன்று (அக்டோபர் 14) மாலை 6:00 மணி அளவில் வெளியாகும் என அறிவித்துள்ளார். அத்துடன் இந்த படத்தின் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். இதன்மூலம் ஹரிஷ் கல்யாண் ‘டீசல்’ படத்தில் ஏதாவது பாடல் ஒன்றை பாடி இருப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் அந்த சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும்? என்பதை தெரிந்து கொள்ள இன்று மாலை வரை காத்திருக்க வேண்டும்.

‘டீசல்’ படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியிருக்கிறார். தர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து அதுல்யா ரவி, வினய் ராய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ