spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅவருக்கு போட்டி என்று யாருமே கிடையாது ..... அஜித் குறித்து பேசிய அருண் விஜய்!

அவருக்கு போட்டி என்று யாருமே கிடையாது ….. அஜித் குறித்து பேசிய அருண் விஜய்!

-

- Advertisement -

நடிகர் அருண் விஜய் மிஷன் சாப்டர் 1 படத்திற்குப் பிறகு ரெட்ட தல எனும் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதற்கிடையில் இவர் பாலா இயக்கத்தில் வணங்கான் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். அவருக்கு போட்டி என்று யாருமே கிடையாது ..... அஜித் குறித்து பேசிய அருண் விஜய்!இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக் குழுவினர் சார்பில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தினை வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சாம் சி எஸ் இந்த படத்தின் பின்னணி இசை தொடர்பான பணிகளை கவனிக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தொடர்பான அறிவிப்பை நேற்று (நவம்பர் 19) அருண் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டு இருந்தது.

நடிகர் அருண் விஜய், சிறந்த கதையம்சம் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். இது ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் வருடா வருடம் தனது பிறந்தநாளின் போது ரத்ததானம் செய்வது, ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்குவது போன்ற பல நற்பணிகளை செய்து வருவது வழக்கம். அதன்படி நேற்றும் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தார் அருண் விஜய். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அருண் விஜயிடம், அஜித் படத்துடன் உங்களுடைய வணங்கான் படம் மோதுகின்றதா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அவருக்கு போட்டி என்று யாருமே கிடையாது ..... அஜித் குறித்து பேசிய அருண் விஜய்!அதற்கு அருண் விஜய், “அஜித் சார் மிகப்பெரிய உச்சம். அவருக்கு போட்டி என்று யாருமே கிடையாது. ஒருவேளை அவருடைய படம் பொங்கலுக்கு ரிலீஸானால் அதன் மூலம் எங்களுக்கும் வழி கிடைக்கும் என்று நம்புகிறேன்” என பதிலளித்துள்ளார்.

we-r-hiring

மேலும் அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் ஏதேனும் ஒரு படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ