Homeசெய்திகள்சினிமாஅவர்தான் என் கணவர்.... 2வது திருமணம் குறித்து நடிகை மேக்னா ராஜ் விளக்கம்!

அவர்தான் என் கணவர்…. 2வது திருமணம் குறித்து நடிகை மேக்னா ராஜ் விளக்கம்!

-

- Advertisement -

நடிகை மேக்னா ராஜ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களை நடித்து வருபவர். அவர்தான் என் கணவர்.... 2வது திருமணம் குறித்து நடிகை மேக்னா ராஜ் விளக்கம்!அந்த வகையில் இவர் தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420 போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். இந்நிலையில் தான் கடந்த 2018-ஆம் ஆண்டு சிரஞ்சீவி சர்ஜாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் 2020இல் மேக்னா கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் உயிரிழந்தார். அவர்தான் என் கணவர்.... 2வது திருமணம் குறித்து நடிகை மேக்னா ராஜ் விளக்கம்!அதன் பின்னர் மேக்னாவிற்கு ஆண் குழந்தை பிறக்க தன்னுடைய கணவரே எனக்கு குழந்தையாக பிறந்து விட்டார் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார் மேக்னா. அது மட்டும் இல்லாமல் தான் செய்யும் ஒவ்வொரு விஷயங்களிலும் தன்னுடைய கணவர் தனக்கு உறுதுணையாக இருக்கிறார் எனவும் கூறி வருகிறார். இந்நிலையில் நடிகை மேக்னா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமூக வலைதளங்களில் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவர்தான் என் கணவர்.... 2வது திருமணம் குறித்து நடிகை மேக்னா ராஜ் விளக்கம்!தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் சிரஞ்சீவி சர்ஜாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எனக்கு நீயே வேண்டும் என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் தன் கணவர் சிரஞ்சீவி சர்ஜாவை தவிர தன்னுடைய வாழ்வில் வேறு யாருக்கும் இடமில்லை என்பதை உறுதி செய்து இரண்டாவது திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மேக்னா.

MUST READ