Homeசெய்திகள்சினிமாசீதாராமம் பட இயக்குனரின் அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோ..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சீதாராமம் பட இயக்குனரின் அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோ….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

கடந்த 2022 ஆம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சீதாராமம். இந்த படத்தை ஹனு ராகவப்புடி இயக்கியிருந்தார். சீதாராமம் பட இயக்குனரின் அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோ..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிர்ணாள் தாகூர் நடித்திருந்தார். மேலும் ரஷ்மிகா மந்தனா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் துல்கர் சல்மான் ராணுவ அதிகாரியாக (ராமனாக) நடிக்க மிர்ணாள் தாகூர், நூர்ஜகான் என்ற மகாராணியாக (சீதா மகாலட்சுமியாக) நடித்திருந்தார். இருவருக்கும் காதல் மலர இருவரின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள், ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள ஆழமான காதல் என அனைத்தையும் எமோஷனலான கதைக்களத்தில் கண்முன் காட்டி இருந்தார் ஹனு ராகவப்புடி. அடுத்ததாக இவர் என்ன படம் இயக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் தற்போது இது தொடர்பான அப்டேட் கிடைத்துள்ளது.

அதன்படி ஹனு ராகவப்புடியின் அடுத்த படத்தில் நடிகர் பிரபாஸ் தான் ஹீரோ எனவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இவர்களின் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தின் பூஜையும் இன்று (ஆகஸ்ட் 17) தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை இயக்குனர் ஹனு ராகவப்புடி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பிரபாஸ் கல்கி 2898AD படத்திற்கு பிறகு தி ராஜா சாப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் சலார் 2 திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ