Homeசெய்திகள்சினிமாஅவர் ஸ்கிரிப்டை படிக்க மாட்டார்..... ரஜினி குறித்து டிஜே ஞானவேல் சொன்னது!

அவர் ஸ்கிரிப்டை படிக்க மாட்டார்….. ரஜினி குறித்து டிஜே ஞானவேல் சொன்னது!

-

- Advertisement -

ஜெய் பீம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டிஜே ஞானவேல். இவர் அடுத்ததாக ரஜினி நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். அவர் ஸ்கிரிப்டை படிக்க மாட்டார்..... ரஜினி குறித்து டிஜே ஞானவேல் சொன்னது!லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்திருக்கிறார். படமானது வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதே சமயம் படத்திலிருந்து வெளியான டீசரையும் பாடல்களையும் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அடுத்ததாக வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி வேட்டையன் படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் டிஜே ஞானவேல் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ரஜினி குறித்து பேசியுள்ளார். “ரஜினி சார் ஸ்கிரிப்டை படிக்க மாட்டார். அவர் கதையைக் கேட்க தான் விரும்புவார். நான் அவரிடம் கதை சொல்லி இரண்டு நாட்கள் கழித்து ஒரு மணி நேரத்தில் முழு கதையையும் சொல்லி, தன்னை முன்னிறுத்துவது எப்படி என்பதை புரிந்து கொண்டார். அவர் ஸ்கிரிப்டை படிக்க மாட்டார்..... ரஜினி குறித்து டிஜே ஞானவேல் சொன்னது!அவருக்கு நிறைய சந்தேகங்கள் வரும். நான் அதிகாலையில் எழுந்தாலும் கூட ஏதேனும் ஒரு காட்சியை பற்றி அவரிடமிருந்து ஒரு குரல் குறிப்பு கிடைக்கும். ரஜினி சார் அவருடைய குரு பாலச்சந்திரன் சாருக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்கிறாரோ அதே அளவு மரியாதையை எனக்கும் கொடுக்கிறார். இது போன்ற குணங்கள் தான் ரஜினி சார், தலைமுறை தலைமுறையாக கோலாச்சி செய்ய காரணமாக இருக்கிறது” என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் டிஜே ஞானவேல்.

MUST READ