spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமனம் நிறைந்தது விரல் உடைந்தது.... அதிர்ச்சியளிக்கும் KPY பாலாவின் இன்ஸ்டா பதிவு!

மனம் நிறைந்தது விரல் உடைந்தது…. அதிர்ச்சியளிக்கும் KPY பாலாவின் இன்ஸ்டா பதிவு!

-

- Advertisement -

மனம் நிறைந்தது விரல் உடைந்தது.... அதிர்ச்சியளிக்கும் KPY பாலாவின் பதிவு!KPY பாலா, கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர். தனக்கென தனி ஒரு ரசிப்பது ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் KPY பாலா தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் ஆதரவற்றவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் மலைவாழ் மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்கி கவனம் பெற்றார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது சொந்த பணத்தை 200 குடும்பங்களுக்கு தலா ஆயிரம் கோடி ரூபாய் வீதம் பிரித்துக் கொடுத்தார். இதனால் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.மனம் நிறைந்தது விரல் உடைந்தது.... அதிர்ச்சியளிக்கும் KPY பாலாவின் இன்ஸ்டா பதிவு! இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் கைவிரல்களில் கட்டு போட்டது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு “மனம் நிறைந்தது.. விரல் உடைந்தது.. நன்றி” என்று பதிவிட்டுள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியுற்ற நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

KPY பாலா ஜுங்கா, தும்பா, நாய் சேகர், ரன் பேபி ரன் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ