Homeசெய்திகள்சினிமாகொடைக்கானலில் அனுமதி இன்றி பங்களா: பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹாவுக்கு நோட்டீஸ்

கொடைக்கானலில் அனுமதி இன்றி பங்களா: பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹாவுக்கு நோட்டீஸ்

-

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பாபி சிம்ஹா. கடந்த 2012-ம் ஆண்டு வெளியான பீட்சா மற்றும் காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் பாபி சிம்ஹா. அதைத் தொடர்ந்து சூது கவ்வும், ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்றவர். குறிப்பாக ஜிகர்தண்டா படத்தில் இவரின் நடிப்புக்கு தேசிய விருது கிடைத்தது. கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்துள்ளார்.இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் கோ 2 படம் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அதன் பிறகு தற்போது ராகேஷ் NS இயக்கத்தில் தடை உடை எனும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும், இந்தியன் 2 , சலார் என அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கொடைக்கானலில் அனுமதியின்றி பாபி சிம்ஹா மற்றும் பிரகாஷ் ராஜ் இருவரும் பங்களா கட்டி வருவதாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வத்தலக்குண்டுவைச் சேர்ந்த முகம்மது ஜூனைத் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை கிராமத்தில் நடிகர்கள் பாபி சிம்ஹா, பிரகாஷ்ராஜ் ஆகியோருக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன. இருவரும் நவீன சொகுசு பங்களா கட்டி வருகின்றனர். மலைப்பகுதிகளில் இயற்கை பேரிடரில் இருந்து பாதுகாக்கும் வகையில் முறையான கட்டட வரைபட அனுமதியுடன் தான் கட்டடங்கள் கட்ட வேண்டும். ஆனால், இருவரும் முறையான அனுமதி பெறவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே இருவர் மீதும் சட்டப்படி நடிவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹா, திண்டுக்கல் கலெக்டர், கொடைக்கானல் உதவி வட்டார அலுவலர், வில்பட்டி ஊராட்சி தலைவர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அடுத்த விசாரணையை ஜனவரி 2-ம் தேதிக்கு தள்ளி தள்ளி வைத்துள்ளது.

MUST READ