Homeசெய்திகள்சினிமாஇந்தியில் தெறி ரீமேக்... மாஸாக வெளியான தலைப்பு...

இந்தியில் தெறி ரீமேக்… மாஸாக வெளியான தலைப்பு…

-

இந்தியில் தெறி படத்தின் ரீமேக்கிற்கு வைத்துள்ள தலைப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு தமிழில் வௌியான திரைப்படம் தெறி. இப்படத்தில் விஜய் நாயகனாக நடித்திருப்பார். அட்லீ படத்தை இயக்கி இருப்பார். படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், ராஜேந்திரன், மகேந்திரன், ஐரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். போலீசாராக விஜய் நடித்த இத்திரைப்படம் பெரும் ஹிட் அடித்து, ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தெறி திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தை கீ படத்தை இயக்கிய காலிஸ் இயக்க உள்ளார். படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், கீர்த்தி சுரேஷ், கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் அட்லீ தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்றது. படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தியில் ரீமேக் செய்யப்படும் தெறி படத்தின் தலைப்பு குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி, படத்திற்கு பேபி ஜான் என்று தலைப்பு வைக்கப்பட உள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

MUST READ