Homeசெய்திகள்சினிமாஅஜித்தே.... ஹிப் ஹாப் ஆதியின் புதிய ஆல்பம் பாடல் இணையத்தில் வைரல்!

அஜித்தே…. ஹிப் ஹாப் ஆதியின் புதிய ஆல்பம் பாடல் இணையத்தில் வைரல்!

-

- Advertisement -

ஹிப் ஹாப் ஆதியின் புதிய ஆல்பம் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.அஜித்தே.... ஹிப் ஹாப் ஆதியின் புதிய ஆல்பம் பாடல் இணையத்தில் வைரல்!

ஹிப் ஹாப் ஆதி ஆரம்பத்தில் ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் பாடகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் களமிறங்கி சுந்தர். சி-யின் அரண்மனை, ஆம்பள, தனி ஒருவன் என பல படங்களுக்கு இசையமைத்து பெயர் பெற்றார். அதே சமயம் நடிகராகவும் இயக்குனராகவும் உருவெடுத்த ஹிப் ஹாப் ஆதி மீசைய முறுக்கு என்ற வெற்றி படத்தை கொடுத்தார். மேலும் நான் சிரித்தால், வீரன், பிடி சார் ஆகிய படங்களில் நடித்திருந்தார். அடுத்தது கடைசி உலகப் போர் எனும் படத்தை தானே தயாரித்து, இயக்கி, நடித்து, இசை அமைத்திருந்தார். இதன் பின்னர் ஹிப் ஹாப் ஆதி, கடைசி உலகப் போர் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாக சொல்லப்படுகிறது.

இவ்வாறு சினிமாவில் ஆர்வம் காட்டி வந்த ஹிப் ஹாப் ஆதி, சில நாட்கள் ஆல்பம் பாடல்களில் கவனம் செலுத்தாமல் இருந்தார். தற்போது மீண்டும் புதிய ஆல்பம் பாடல் ஒன்றை எழுதி, பாடி, இசையமைத்துள்ளார். அதன்படி Certified self Made என்ற பெயரில் வெளியாகி உள்ள புதிய ராப் பாடலில் அஜித்தே… எனும் வார்த்தை இடம்பெற்றுள்ளது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ