ஹாட் ஸ்பாட் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த மே மாதம் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஹாட் ஸ்பாட் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கலையரசன், ஜனனி ஐயர், சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இந்த படத்தில் கதை சொல்ல வரும் இயக்குனராக நடித்திருந்தார். அதாவது ஒரு தயாரிப்பாளர் இடம் இயக்குனர் நான்கு விதமான கதைகளை சொல்கிறார். அந்த நான்கு கதைகளும் வித்தியாசமாக ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக உருவாக்கப்பட்டிருந்தது. அதாவது அரசியல் – சமூகம் சார்ந்த சிக்கல்களை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொடுத்திருந்தார் விக்னேஷ் கார்த்திக். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்றது.
Aarambikalaama!!
Let’s double up the Sambavam😎. @VVStudioz takes vera level pleasure to present this CONTROVERSIAL KAAVIYAM #HotSpot2Much#2much_ah_povoma@TheVishnuVishal @vikikarthick88 @KJB_Talkies @KJB_iambala #Sevenwarrior @DuraiKv@Pro_Velu @decoffl#VishnuVishal #VV pic.twitter.com/0iZpQNZzZ3
— Vishnu Vishal Studioz (@VVStudioz) August 9, 2024
இந்த நிலையில் அடுத்ததாக விக்னேஷ் கார்த்திக் ஹாட் ஸ்பாட் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ஹாட் ஸ்பாட் 2 மச் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை முதல் பாகத்தை தயாரித்திருந்த கே ஜே பி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் நடிகர் விஷ்ணு விஷால் இந்த படத்தை வழங்க இருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை படக்குழுவினர் வீடியோ ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.