ரஜினிக்கு வில்லனாக நடிக்க நான் தயார் என்று நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், ஆரவ் உள்ளிட்டோர் நடிப்பில் ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.

அப்போது வரலட்சுமி பேசியது,
“ஒரு சிறிய படமாக இருந்தாலும் அதில் கதை என்பது இருக்கும். இந்தப் படத்திலும் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படியான கதை இருக்கும். இந்தப் படத்துடன் ஆஹா இணைந்திருப்பது மகிழ்ச்சி. இந்தப் படத்தின் நடிகர்கள் பற்றி கூற வேண்டும் என்றால் ஆரவ், அப்பொழுதுதான் பிக் பாஸில் டைட்டில் வென்று வெளியே வந்த சமயம். ஆரவ், சந்தோஷ் என நாங்கள் எல்லாம் நல்ல நண்பர்கள் என்பதாலும் இந்த படம் நான் ஒத்துக் கொள்ள ஒரு காரணம்.
எங்கள் படத்தில் பெரிதாக சர்ச்சை என்பது இல்லை. இப்பொழுது எல்லாம் படத்தில் ஏதாவது ஒரு சர்ச்சை வைத்து விடுகிறார்கள். ஆனால், எங்கள் படத்தில் கதை மட்டும் தான் உள்ளது என்பதால் ஊடக நண்பர்கள் நீங்கள் தான் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
நான் ஒரு நடிகை. எந்த மாதிரியான கதாப்பாத்திரமாக இருந்தாலும் நடிப்பேன். வில்லியாக, கேரக்டர் ரோல் என ஏதுவாக இருந்தாலும் என்னால் அந்த கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்ய முடியம் என்றால் கண்டிப்பாக நடிப்பேன். வாய்ப்பு கிடைத்தால் ரஜினி சாருக்கு கூட வில்லியாக நடிப்பேன்” என்று பேசியுள்ளார்.