இயக்குனர் மிஸ்கின் தான் விஷாலின் எந்த படத்தையும் பார்த்ததில்லை என பேட்டியளித்துள்ளார்.
மிஸ்கின் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர். இவரது இயக்கத்தில் வெளியான அஞ்சாதே, பிசாசு, துப்பறிவாளன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ட்ரெயின், பிசாசு 2 போன்ற படங்களை இயக்கியிருக்கும் நிலையில் இந்த படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இதற்கிடையில் நடிப்பதிலும் ஆர்வம் கொண்ட மிஸ்கின் தொடர்ந்து பல படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான வணங்கான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மிஸ்கின். இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நித்யா மேனன் மற்றும் மிஸ்கின் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மிஸ்கின் விஷாலின் எந்த படத்தையும் பார்க்கவில்லை என கூறியுள்ளார்.
#Mysskin in Recent Interview
– I did not watch any movie of #NithyaMenen, I did not watch any movie of #Vishal also, But I work with Vishal
– I did not watch any movie of #UdhayanidhiStalin, But I work with himpic.twitter.com/VKUT0OhxzH— Movie Tamil (@MovieTamil4) January 10, 2025
அதன்படி அந்த பேட்டியில் பேசிய மிஸ்கின், “நித்யா மேனன் நடித்த எந்த படங்களையும் பார்க்கவில்லை. அதுபோல விஷாலின் எந்த படத்தையும் நான் பார்க்கவில்லை. ஆனால் அவருடன் பணியாற்றி இருக்கிறேன். மேலும் உதயநிதி ஸ்டாலினின் எந்த படத்தையும் பார்க்கவில்லை. ஆனால் அவருடனும் பணியாற்றி இருக்கிறேன். அது மாதிரி தான் விஜய் சேதுபதியின் எந்த படத்தையும் பார்க்கவில்லை. அவருடைய விவசாயி படத்தை மட்டும் தான் பார்த்தேன். இது எல்லாமே சீக்ரெட்” என்று தெரிவித்துள்ளார்.