நடிகை நித்யா மேனன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். இவர் ஆரம்பத்தில் 180, வெப்பம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடிக்க தொடங்கியவர். அதன் பிறகு ஓ காதல் கண்மணி, மெர்சல், காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது இவர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார் நித்யா மேனன். இதற்கிடையில் இவர் தனுஷ் உடன் இணைந்து திருச்சிற்றம்பலம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான நிலையில் படத்தினை மித்ரன் ஆர் ஜவகர் இயக்கியிருந்தார். நல்ல ஒரு பீல் குட் படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகையின் நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
“I really didn’t expect the national award for this Genre of #Thiruchitrambalam. It’s a complete shock to me😀. #Dhanush has called me very first and he said glad I’m the first one to call you & congratulate for the national award♥️✨” pic.twitter.com/y459csoub5
— AmuthaBharathi (@CinemaWithAB) August 18, 2024
இது குறித்து பேசி நித்யா மேனன், “நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. தனுஷ் தான் எனக்கு முதலில் போன் மூலம் தொடர்பு கொண்டு என்னை வாழ்த்தினார். நான் எதற்காக என்று கேட்டேன். அதன் பிறகு தான் தேசிய விருது எனக்கு கிடைத்திருப்பது தெரிய வந்தது. என்னுடன் தனுஷ், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகிய இந்த 4 பேரும் இல்லையென்றால் இது நடந்திருக்காது” என்று தெரிவித்துள்ளார்.