நடிகை மஞ்சு வாரியர் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நிலையில் தமிழில் இவர் அசுரன், துணிவு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அடுத்ததாக விடுதலை 2 திரைப்படத்திலும் நடித்து வரும் இவர் தற்போது வேட்டையன் திரைப்படத்தின் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. இந்த படத்தை டிஜே ஞானவேல் இயக்கியிருக்கும் நிலையில் லைக்கா நிறுவனம் படத்தினை தயாரித்துள்ளது. அனிருத் இதற்கு இசையமைத்து இருக்கிறார். ரஜினி இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் அமிதாப் பச்சன், பகத் பாஸில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா, கிஷோர், அபிராமி, ரோகினி, ரக்சன் உள்ளிட்ட பல பிரபலங்கள் படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த தற்போது ப்ரமோஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றை நடிகை மஞ்சு வாரியார் ரஜினி குறித்து பேசி உள்ளார். அவர் கூறியதாவது, “டிஜே ஞானவேல் மற்றும் ரஜினிகாந்த் சார் ஆகிய இருவரின் ஸ்டைலும் வித்தியாசமானது. இருவரும் இணையும் போது ஆழமான என்டர்டெயின்மெண்ட் கிடைக்கும். ரஜினி சாரின் படையப்பா திரைப்படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். கணக்கே இல்லாமல் அந்த படத்தை பார்த்திருக்கிறேன். நான் அவருடன் பேசுவதற்கு தயங்கிக் கொண்டிருக்கும்போது அவரே வந்து என்னிடம் அசுரன் திரைப்படத்தில் என்னுடைய நடிப்பு குறித்தும் பைக் ரைடிங் குறித்தும் பேசினார்” என்று தெரிவித்துள்ளார் மஞ்சு வாரியர்.