spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇப்படி நடக்கணும்னு நினைச்சு கூட பார்த்ததில்ல.... அர்ஜுன் தாஸ் வெளியிட்ட அறிக்கை!

இப்படி நடக்கணும்னு நினைச்சு கூட பார்த்ததில்ல…. அர்ஜுன் தாஸ் வெளியிட்ட அறிக்கை!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் அர்ஜுன் தாஸ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.இப்படி நடக்கணும்னு நினைச்சு கூட பார்த்ததில்ல.... அர்ஜுன் தாஸ் வெளியிட்ட அறிக்கை! அதைத்தொடர்ந்து இவர் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அதே சமயம் இவர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்க அபிநந்தன் ராமானுஜம் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படம் இன்று (ஏப்ரல் 10) திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் அர்ஜுன் தாஸ் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், “இன்னும் சில மணி நேரங்கள் தான் இருக்கிறது. எனக்கு உற்சாகமாகவும் ஆர்வமாகவும் பதட்டமாகவும் உள்ளது. அஜித் சாரின் படங்களுக்கு ப்ரோமோஷன் செய்த போது அவருடன் இணைந்து நடிப்பேன் என நினைத்ததில்லை. ஆனால் பல வருடங்களுக்கு பின்னர் அது நடந்துள்ளது. இரவு முழுக்க விழித்திருந்து அதிகாலையில் முதல் ஆளாக படத்தை பார்ப்பேன்.

ஆனால் இன்று அஜித் சாருடன் பிறையை பகிர்ந்து நடித்துள்ளதை திரையில் பார்க்க மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன். குட் பேட் அக்லி படத்தை பார்த்து நீங்கள் அனைவரும் ஒரு முழுமையான மகிழ்ச்சியை பெறுவீர்கள் என நம்புகிறேன். ஆதிக் பிரதர் உங்களுக்கு மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள். உங்கள் வாக்குறுதியை மறந்து விடாதீர்கள். சில மணி நேரத்தில் திரையரங்குகளில் சந்திப்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ