ஆர்.ஜே.பாலாஜி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல் ஒரு இயக்குனராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே இவர் மூக்குத்தி அம்மன் எனும் திரைப்படத்தை இயக்கிய இருந்த நிலையில் அடுத்தது சூர்யா 45 திரைப்படத்தை இயக்க உள்ளார். இதற்கிடையில் எல்கேஜி, ரன் பேபி ரன், வீட்ல விசேஷம், சிங்கப்பூர் சலூன் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அடுத்தது இவரது நடிப்பில் உருவாகியுள்ள சொர்க்கவாசல் திரைப்படம் வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஆர்.ஜே.பாலாஜி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இந்தியன் 2 படம் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர் பேசியதாவது, “2015 – 2016ஆம் ஆண்டில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. சங்கர் படத்தில் நடிக்கப் போகிறோம் என்று மகிழ்ச்சியாக இருந்தது. அதன் பிறகு அந்த படம் பல காரணங்களால் நிறுத்திவைக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டபோது என்னை மீண்டும் படக்குழு அழைத்தது.
ஆனால் அப்போது எல்கேஜி படத்தில் நடித்து முடித்திருந்தேன். இந்தியன் 2 படத்தில் சித்தார்த், எஸ் ஜே சூர்யா என பலரும் நடிக்க இருந்த நிலையில் எனக்கு என்ன மாதிரியான கதாபாத்திரம் இருக்கும் என்று யோசித்தேன். அதே சமயம் என்னை ஹீரோவாக வைத்து படம் பண்ண பல தயாரிப்பாளர்கள் முதலீடு செய்கிறார்கள். அதனால ஐந்து நிமிட கேரக்டர் ரோலில் நடிப்பது சரியல்ல என்று முடிவு செய்து இந்தியன் 2 வாய்ப்பை மறுத்துவிட்டேன். சிங்கத்துக்கு வாலாக இருக்கிறதை விட எழுத்து தலையாக இருக்கலாம் என்று முடிவு செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -