தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிம்பு, மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள தற்போது தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜூன் 5ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இது தவிர ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தனது 49வது படத்திலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 50வது படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தனது 51வது திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஏற்கனவே கடந்த வருடம் சிம்புவின் திரைப்படம் எதுவும் வெளிவராத நிலையில் ரசிகர்கள் அடுத்ததாக தக் லைஃப் திரைப்படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி சமீபத்தில் வெளியான ட்ரெய்லரும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.
“Today audience are clipping a part of film & posting in social media but we didn’t had that opportunity before🤞. To watch Kandukondain Kandukondain musical climax, I have went for theatres 4-5 times😍♥️. That giving great goosebumps🔥”
– #SilambarasanTRpic.twitter.com/C1LN68qiS8— AmuthaBharathi (@CinemaWithAB) May 22, 2025
இந்நிலையில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிம்பு, “இன்று ரசிகர்கள் பலரும் படத்தின் ஒரு பகுதியை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள். ஆனால் அதற்கு முன்பு எங்களுக்கு அந்த மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தின் கிளைமாக்ஸில் அஜித் – தபுவின் அந்த காட்சியில் ‘என்ன சொல்ல போகிறாய்’ பாடலின் நாதஸ்வரத மியூசிக் ஒன்று வரும். அந்த இசைக்காகவே நான் கேட்டதுக்கு 4,5 முறை தியேட்டருக்கு சென்றேன். இப்பொழுது அந்த மியூசிக் நமக்கு ஈசியாக கிடைக்கிறது. அந்த மியூசிக் சூப்பரான கூஸ்பம்ப்ஸ் கொடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.