Homeசெய்திகள்சினிமாநான் ரஜினியை இயக்குவேன்... விரைவில் அது நடக்கும்..... உறுதி செய்த மாரி செல்வராஜ்!

நான் ரஜினியை இயக்குவேன்… விரைவில் அது நடக்கும்….. உறுதி செய்த மாரி செல்வராஜ்!

-

- Advertisement -

இயக்குனர் மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என காலத்தால் அழியாத படங்களைத் தந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். நான் ரஜினியை இயக்குவேன்... விரைவில் அது நடக்கும்..... உறுதி செய்த மாரி செல்வராஜ்!அடுத்ததாக இவரது இயக்கத்தில் பைசன் எனும் திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இவர் இயக்கியுள்ள மற்றொரு படமான வாழை எனும் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 23ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. மேலும் இவர் நடிகர் தனுஷ், கார்த்தி ஆகியோரின் நடிப்பில் தனது அடுத்தடுத்த படங்களை இயக்க உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் மாரி செல்வராஜ் ரஜினியை இயக்குவது குறித்து பேசி இருக்கிறார். அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ரஜினியின் அடுத்த படமான தலைவர் 172 திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கப் போகிறார் என்று சொல்லப்பட்டது. இதனை மாரி செல்வராஜ் அந்தப் பேட்டியில் உறுதி செய்துள்ளார். நான் ரஜினியை இயக்குவேன்... விரைவில் அது நடக்கும்..... உறுதி செய்த மாரி செல்வராஜ்!“ஒவ்வொரு படங்களை முடித்த பின்னரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவேன். நான் வேலை செய்யும் ஸ்டைல் ரஜினி சாருக்கு ரொம்ப பிடிக்கும். தற்போதைய கமிட்மெண்ட்களான பைசன், தனுஷ் படம், கார்த்தி படம் ஆகியவற்றிற்கு பிறகு ரஜினியை இயக்குவேன். விரைவில் இது நடக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். எனவே இவருடைய அடுத்த படத்தை மாரி செல்வராஜ் இயக்குனர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ