Homeசெய்திகள்சினிமாநாக சைதன்யாவிற்கும் பிரபல நடிகைக்கும் இன்று நிச்சயதார்த்தம்.... ஆனா இதுல ஒரு ட்விஸ்ட்!

நாக சைதன்யாவிற்கும் பிரபல நடிகைக்கும் இன்று நிச்சயதார்த்தம்…. ஆனா இதுல ஒரு ட்விஸ்ட்!

-

நாக சைதன்யாவிற்கும் பிரபல நடிகைக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறது.நாக சைதன்யாவிற்கும் பிரபல நடிகைக்கும் இன்று நிச்சயதார்த்தம்.... ஆனா இதுல ஒரு ட்விஸ்ட்!

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நாக சைதன்யா. இவர் கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கஸ்டடி திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து தண்டேல் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகை சமந்தாவை காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2021 இல் தங்களின் திருமண உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்தனர். அதைத்தொடர்ந்து நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவுடன் இணைந்து பல இடங்களுக்கு டேட்டிங் செல்வதாகவும் இருவரும் காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டனர். தொடர்ந்து இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி வந்தனர். நாக சைதன்யாவிற்கும் பிரபல நடிகைக்கும் இன்று நிச்சயதார்த்தம்.... ஆனா இதுல ஒரு ட்விஸ்ட்!ஆனால் இருவரும் இதுவரை ஒருவரை ஒருவர் காதலிப்பதாக பொது இடங்களில் ஒப்புக்கொள்ளவே இல்லை. இந்நிலையில் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா ஆகிய இருவருக்கும் இன்று (ஆகஸ்ட் 8) மாலை நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இன்றைய தினம் தான் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நடிகர் நாக சைதன்யா தனது முன்னாள் மனைவி சமந்தாவிடம் தனது காதலை சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் தொடர்பான அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ