Homeசெய்திகள்சினிமாவாலி படத்தின் அந்த காட்சியை மட்டும் மறக்கவே முடியாது..... எஸ்.ஜே. சூர்யாவை புகழ்ந்த சிம்ரன்!

வாலி படத்தின் அந்த காட்சியை மட்டும் மறக்கவே முடியாது….. எஸ்.ஜே. சூர்யாவை புகழ்ந்த சிம்ரன்!

-

- Advertisement -

வாலி படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் நடிகை சிம்ரன், எஸ் ஜே சூர்யாவை பாராட்டி பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.வாலி படத்தின் அந்த காட்சியை மட்டும் மறக்கவே முடியாது..... எஸ்.ஜே. சூர்யாவை புகழ்ந்த சிம்ரன்!

கடந்த 1999 ஆம் ஆண்டு எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான படம் வாலி. அஜித், சிம்ரன், ஜோதிகா ஆகியோரின் கூட்டணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அஜித் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இன்றுவரையிலும் இத்திரைப்படம் ரசிகர்களின் பேவரைட் படங்களில் ஒன்றாக இருக்கிறது. அதன்படி இத்திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்ட நிலையிலும் ரசிகர்கள் வாலி திரைப்படத்தினை கொண்டாடி வருகின்றனர். வாலி படத்தின் அந்த காட்சியை மட்டும் மறக்கவே முடியாது..... எஸ்.ஜே. சூர்யாவை புகழ்ந்த சிம்ரன்!ரசிகர் ஒருவர் வாலி படத்தின் காட்சி ஒன்றினை பகிர்ந்து அந்த காட்சியில் சிம்ரன், அஜித் ஆகியோர் நன்றாக நடித்திருந்ததாகவும் எஸ் ஜே சூர்யா தனது வேலையை சிறப்பாக செய்திருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இதை கண்ட நடிகை சிம்ரன், “அந்தக் காட்சியை என்னால் மறக்கவே முடியாது. எஸ் ஜே சூர்யா மிகவும் திறமையானவர்” என்று பதிவிட்டிருந்தார்.

சிம்ரனின் இந்த பதிவிற்கு எஸ் ஜே சூர்யா, ” என்னுடைய கடமையை தான் நான் செய்தேன். நீங்களும் அஜித் சாரும் அதைக் கொண்டுபோன விதம்தான் ரசிகர்கள் இன்றுவரையிலும் படத்தை கொண்டாடி வருகின்றனர்” என்று பதில் அளித்துள்ளார்.

MUST READ