Homeசெய்திகள்சினிமாமன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையத்தின் மூலம் நடவடிக்கை எடுப்பேன்..... நடிகை குஷ்பூ!

மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையத்தின் மூலம் நடவடிக்கை எடுப்பேன்….. நடிகை குஷ்பூ!

-

- Advertisement -

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். இவர் தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் தி ரோட் திரைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் 19ஆம் நாளில் லியோ திரைப்படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் வெளியான லியோ படத்திலும் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் லியோ படத்தில் நடிகர் மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையத்தின் மூலம் நடவடிக்கை எடுப்பேன்..... நடிகை குஷ்பூ!!

இந்நிலையில் சமீபத்தில் மன்சூர் அலிகான், பேட்டி ஒன்றில் திரிஷா குறித்து இழிவான வார்த்தைகளை பேசி இருக்கிறார். நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய அநாகரிகமான வார்த்தைகள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த வகையில் மன்சூர் அலிகான் இருக்கு திரிஷா உட்பட லோகேஷ் கனகராஜ், குஷ்பூ, ரோஜா உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை குஷ்பூ தனது சமூக வலைதள பக்கத்தில், “தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நான் ஏற்கனவே மன்சூர் அலிகான் பிரச்சனையை எடுத்து என் சீனியரிடம் கூறியுள்ளேன். நிச்சயம் அதன் மீது நடவடிக்கையை எடுப்பேன். இப்படிப்பட்ட அசுத்தமான மனதை யாரும் விட்டுவிட முடியாது. திரிஷாவிற்கு ஆதரவாக நானும் எனது மற்ற சகாக்களும் இருக்கிறார்கள். திரிஷாவை பற்றி இந்த மனிதன் மிகவும் கேவலமான மனநிலையில் பேசுகின்றான். பெண்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு கண்ணியத்தை ஏற்படுத்தவும் நாம் பல் நகத்துடன் போராடும்போது இது போன்ற ஆண்கள் நம் சமூகத்தில் மிகவும் கேவலமான செயலை செய்கிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ