நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து விஜய், அஜித், விக்ரம், சிம்பு, ரவி, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றி வரும் திரிஷா இன்றுவரையிலும் ஸ்டார் அந்தத்துடன் வலம் வருகிறார். தற்போது இவர், சூர்யா 45, ராம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இது தவிர மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் சமீபத்தில் வெளியான ட்ரெய்லரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதுமட்டுமில்லாமல் அந்த ட்ரெய்லரில் திரிஷாவின் கேரக்டர் தான் பலருக்கும் அதிர்ச்சி அளித்தது. ஏனென்றால் அவர், தக் லைஃப் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கமல்ஹாசனின் கள்ளக்காதலியாக காட்டப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து தக் லைஃப் படத்திலிருந்து வெளியான ‘சுகர் பேபி’ பாடலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் நடிகை திரிஷா, சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக மாடலிங்கில் கவனம் செலுத்தினார். அப்போது பேட்டி ஒன்றில் பேசிய திரிஷா, சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் ஏ.ஆர். ரகுமான் பாட்டுக்கு டான்ஸ் ஆட மாட்டேன் என்றும் கூறியிருந்தார். திரிஷா கொடுத்த இந்த பேட்டி தொடர்பான வீடியோவையும், ஏ.ஆர். ரகுமான் இசையில் ‘சுகர் பேபி’ பாடலுக்கு திரிஷா நடனமாடி இருந்த வீடியோவையும் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- Advertisement -