இட்லி கடை படத்தின் ஃபர்ஸ்ட் டே கலெக்சன் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தனுஷின் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவாகியிருந்த ‘இட்லி கடை’ திரைப்படம் நேற்று (அக்டோபர் 1) ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனமும், உண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. ஜி.வி. பிரகாஷ் இந்த படத்தின் இசையமைப்பாளராகவும், கிரண் கௌசிக் இதன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி இருந்தனர். படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிக்க நித்யா மேனன், ஷாலினி பாண்டே ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். மேலும் ராஜ்கிரண், கீதா கைலாசம், பார்த்திபன், சமுத்திரக்கனி, சத்யராஜ் ஆகியோரும் நடித்திருந்தனர். இந்த படம் தனுஷ் இயக்கிய ‘ராயன்’ படத்தை போல் இல்லாமல் நல்ல ஒரு பீல் குட் படமாக வெளிவந்திருந்தது. தனுஷின் நடிப்பும், ஜி.வி. பிரகாஷின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம் கொடுத்துள்ளன. இது தவிர அனைத்து கதாபாத்திரங்களும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்று வருகிறது.
இவ்வாறு படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்த போதிலும் எந்த ஒரு திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் ஆகவில்லை எனவும், குறைந்தபட்ச டிக்கெட்டுகள் கூட விற்கப்படவில்லை எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.5 கோடி வசூல் செய்துள்ளதாகவும், உலக அளவில் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர் விடுமுறை நாட்கள் இருப்பதால் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.