இட்லி கடை படத்தின் புதிய போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனுஷின் 52 வது படமாக ‘இட்லி கடை’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன், ராஜ்கிரண், சத்யராஜ், அருண் விஜய், ஷாலினி பாண்டே, பார்த்திபன் மற்றும் பலர் நடித்துள்ளனர். தனுஷ் இயக்கியுள்ள இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படம் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களும், போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. மேலும் ‘இட்லி கடை’ படத்தின் ப்ரோமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில் நடிகர் தனுஷ், கோட் சூட்டில் காணப்படுகிறார். இதுவரை வெளியான மற்ற போஸ்டர்களில் தனுஷ் கிராமப்புற தோற்றத்தில் காணப்பட்டார்.
எனவே இதன் மூலம் தனுஷ் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே இந்த படம் எந்த மாதிரியான கதைக்களமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில் தற்போது பரவி வரும் போஸ்டர் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் தனுஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ட்ராங்கான கன்டென்ட் இருக்கும் என்று நம்பப்படுகிறது.