இட்லி கடை படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகரான தனுஷ் ஏகப்பட்ட படங்களை தற்போது கைவசம் வைத்துள்ளார். அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை தனுஷ் தானே இயக்கி, நடித்துள்ளார். ‘ராயன்’ படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கியுள்ள இந்த படம் நல்ல ஒரு பீல் குட் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், பாடல்களும் வெளியாகி வந்தது. அடுத்தது இந்த படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. எனவே இப்படத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கலாம். இந்நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த அப்டேட் கிடைத்திருக்கிறது. அதன்படி இதன் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 27 நிமிடங்கள் இருக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ரன்னிங் டைம் மிக அதிகமாகவும், மிகக் குறைவாகவும் இல்லை என்பதால் இந்த படத்தை கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள்.

தனுஷின் 52 வது படமான ‘இட்லி கடை’ திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் தனுஷுடன் இணைந்து அருண் விஜய், நித்யா மேனன், ராஜ்கிரண், சத்யராஜ், ஷாலினி பாண்டே மற்றும் பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.