தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் தனுஷ், பவர் பாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவர் ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்களை இயக்கி பெயரையும் புகழையும் பெற்றார். தற்போது இவர், இட்லி கடை எனும் திரைப்படத்தையும் தானே இயக்கி, நடித்து வருகிறார். இந்த படம் தனுஷின் 52 வது படமாகும். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ராஜ்கிரண், நித்யா மேனன், சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அருண் விஜய் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
டான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். கிரண் கௌஷிக் இதன் ஒளிப்பதி பணிகளை கவனித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி, பொள்ளாச்சி, இராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
எனவே 2025 அக்டோபர் மாதம் 1ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வரும் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் நடைபெறுகிறது. அதற்காக படக்குழு பாங்காக் பறந்திருக்கும் நிலையில் அங்கு அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- Advertisement -