தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் யோகி பாபு. அந்த வகையில் இவர் ரஜினி, அஜித், விஜய், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். மேலும் இவர் ஹீரோவாகவும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக இவரது நடிப்பில் ‘ஜோரா கைய தட்டுங்க’ திரைப்படம் வெளியானது. அதே சமயம் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஏஸ்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் யோகி பாபு. இன்னும் ஏகப்பட்ட படங்களை இவர் கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் தான் சமீபகாலமாக யோகி பாபு, ரவி மோகன் நடிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வந்தது.
இதுகுறித்து யோகி பாபு சமீபத்தில் நடந்த பேட்டியில், “என்னை ஹீரோவாக வைத்து ரவி மோகன் படம் பண்ணப் போகிறார்” என்று கூறி ரவி மோகன் இயக்கத்தில் தான் நடிப்பதை உறுதி செய்து இருக்கிறார். இனிவரும் நாட்களில் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ரவி மோகன் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இது தவிர கராத்தே பாபு எனும் படத்தையும் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.