நடிகை திரிஷா நடித்த ராங்கி திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லா ஸ்டுடியோவில் நடைபெற்றது

அப்பொழுது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த நடிகர் த்ரிஷா பேசியதாவது;

ராங்கி திரைப்படத்தில் தையல் நாயகி கதாபாத்திரத்தில் நடித்ததை இப்போது சொல்ல கூடாது. இந்த கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானது.
படம் பார்க்கும்போது ஒரு தெனாவட்டு தனமாக, விரிவாக அந்த கதாபாத்திரம் சொல்லும். ராங்கி படத்தில் இந்த கதாபத்திரம் போல்டான கதாபத்திரம் ஆகும். பலவீனத்தினால் ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து தப்பித்து ஓடி தான் ஆக வேண்டும்.

ராங்கி திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய 30 காட்சிகளை சென்சார் போர்டு சார்பாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் படத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. ஏன் என்றால் இந்த கதை ஒரு சின்ன ஃபேமிலி பிரச்சனையில் இருந்து ஆரம்பமாகி, அந்த பிரச்சனை இன்டர்நேஷனல் வரை செல்லும். அதற்குள் ஒரு சின்ன காதல் இருக்கிறது. கதை மாறும் இடத்தை பாலிடிக்ஸ் பேசக்கூடிய ஒரு இடமாக நான் உருவாக்கினேன். அது இன்டர்நேஷனல் பாலிடிக்ஸ், லிபியா -அமெரிக்கா உறவுக்காண பிரச்சனை போர் குறித்து நான் கதையில் எழுதி உள்ளேன் அதுதான் சென்சார் போர்டு-ல் பிரச்சனையானது. அமெரிக்கா என்று சொல்லக்கூடாது லிபியா என்று சொல்லக்கூடாது நாட்டின் கொடிகளை பயன்படுத்தக்கூடாது என்று பல கட்டுப்பாடுகள் விதித்தனர்.
காட்சிகள் நீக்க சொல்லவில்லை சில இடங்களில் காட்சிகளை ப்ளர் செய்ய சொல்லி இருந்தார்கள். ஆனால் முக்கியமாக நாங்க சொல்ல விரும்புற அந்த கதையை இந்த பிளர் பண்ண விஷயங்கள் பாதிக்காது.

அந்தப் போரை பற்றிய முக்கிய பிரச்சினையை மட்டும் நான் சொல்லி இருக்கிறேன். இனிமேல் நீங்கள் பெட்ரோல் வாங்க வேண்டும் என்றால் டாலர் கொடுக்கக் கூடாது கோல்டு கொடுத்தால் தான் பெட்ரோல் வாங்க முடியும்” அப்படி ஒரு கட்டுப்பாடு விதிப்பு வரும் பொழுது தான் அமெரிக்காவுக்கும் லிபியாவுக்கும் பிரச்சினை உருவானது. அதுதான் இந்த கதையின் ஒரு இரண்டாவது தடமாக இருக்கிறது.
மேக்கப் போடாமல் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் “96“ படத்தில் நான் மேக்கப் போடாமல் தான் நடித்தேன். இந்த கதாபாத்திரத்திற்கு மேக்கப் போட்டால் அது நல்லா இருக்காது. இது ஒரு செய்தியாளர் கதாபாத்திரம் அவர்கள் அதிகமாக மேக்கப் போட மாட்டார்கள்.
சில ஸ்கிரிப்ட் கேரளாஸ்ஸாக தேர்ந்தெடுத்து இருக்கிறேன். என் ரசிகர்களுக்காக நல்ல படங்களில் நடிக்கிறேன். தற்போது நடிகைகளுக்கு முக்கியத்துவம் உருவாகி இருக்கிறது. ஐஸ்வர்யா ராய் இன்னும் கூட நடித்துக் கொண்டிருக்கிறார் அவர்கள் பன்னும் படங்கள் பிரம்மிப்பாக இருக்கும். இப்பொழுது ஓடிடி தலங்கள் அதிகமாக வந்துவிட்டது.

சமுகவலைதளங்கள் என்றால் பிளஸ்சும் இருக்கிறது மைநசும் இருக்கிறது.
நடிகர்களுக்கு சரிசமமாக நடிகைகளுக்கும் கட்ட அவுட்டுகள் வைக்கிறார்கள், பாலபிஷேகம் செய்கிறார்கள். இதனை நான் எப்படி பார்க்கிறேன் என்றால் சமீபத்தில் நயன்தாராவுக்கு கனெக்ட் மூவிக்கு பெரிய கட் அவுட் வைக்கப்பட்டது
ஆனால் அதை வைக்க வேண்டாம் என்று சொன்னால் கூட அதை ரசிகர்கள் ஒரு பிரியத்தோடு செய்கிறார்கள். இந்த பட்டம் , டைட்டில் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.
என்ன பொருத்தவரை படம் பாருங்கள் எங்களை உங்கள் இதயத்தில் வையுங்கள் அது போதும்.
காங்கிரஸ் கட்சியில் நான் இணைகிறேன் என்கிற செய்தி என்பது துளி கூட உண்மை இல்லை. எப்படி இதுபோன்ற செய்திகள் வருகிறது என்று எனக்கு தெரியவில்லை.