Homeசெய்திகள்சினிமாஇளையராஜாவாக தனுஷ் நடிக்கும் புதிய படம்..... முக்கிய அறிவிப்பு!

இளையராஜாவாக தனுஷ் நடிக்கும் புதிய படம்….. முக்கிய அறிவிப்பு!

-

நடிகர் தனுஷ் தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு ராயன், குபேரா போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இளையராஜாவாக தனுஷ் நடிக்கும் புதிய படம்..... முக்கிய அறிவிப்பு!சேகர் கம்முலா இயக்கி வரும் குபேரா படத்தின் படப்பிடிப்புகள் திருப்பதி, பாங்காக் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் நடிகர் தனுஷ் பாலிவுட்டிலும் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். இதற்கிடையில் இசைஞானி இளையராஜாவின் பயோபிக் படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்திருந்தது. அதன்படி இளையராஜாவாக தனுஷ் நடிக்க உள்ள புதிய படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க இருக்கிறார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு நாளை மார்ச் 20 ஆம் தேதி நண்பகல் 12.30 மணி அளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை வெளியாகும் அறிவிப்பில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.இளையராஜாவாக தனுஷ் நடிக்கும் புதிய படம்..... முக்கிய அறிவிப்பு!நடிகர் தனுஷ் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் வலம் வருகிறார் . அதன்படி ராயன் படத்தை இயக்கி முடித்த தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ