Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் அதிரடி அப்டேட்டுகள்!

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் அதிரடி அப்டேட்டுகள்!

-

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தன்று வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று சுமார் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றி நடை போட்டு வருகிறது. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் அதிரடி அப்டேட்டுகள்!இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சிபி சக்கரவர்த்தி, சுதா கொங்கரா ஆகியோரின் இயக்கத்தில் தனது அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனின் 25 வது படமாக உருவாக இருக்கும் புறநானூறு படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் அதிரடி அப்டேட்டுகள்!விரைவில் புறநானூறு என்ற தலைப்பு மாற்றி வைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதேசமயம் தற்காலிகமாக SK 25 என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதர்வா, ஜெயம் ரவி, ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக சமீப காலமாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன.சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் அதிரடி அப்டேட்டுகள்! இந்நிலையில்தான் அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு SK 24 மற்றும் SK 25 ஆகிய படங்களின் அறிவிப்பு வெளியாகும் என்று புதிய தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

MUST READ