தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரும், சிறந்த நடிகருமான விஜயகாந்த் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சாதாரண பரிசோதனைக்காக தான் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் விரைவில் வீடு திரும்புவார் எனவும் தேமுதிக கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து நவம்பர் 29ஆம் தேதி விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை இன்னும் 15 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவ நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இதனால் சமூக வலைதளங்களில் பலரும் விஜயகாந்த்திற்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும், ஐ சி யு வில் இருக்கிறார் எனவும் செய்திகள் பரப்பி வந்தனர்.
கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார்.
வெகு விரைவில் கேப்டன் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார்.
யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்! என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.– திருமதி. பிரேமலதா விஜயகாந்த். pic.twitter.com/u6tvBGtCdD
— Vijayakant (@iVijayakant) December 2, 2023
இதற்கிடையில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் அவர்கள் நலமுடன் இருக்கிறார் யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம். நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இருந்த போதிலும் ஊடகங்கள் தொடர்ந்து வதந்திகளை பரப்பி வந்த நிலையில், தற்போது பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் விஜயகாந்த் அவர்களுடன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார்.
வெகு விரைவில் கேப்டன் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார்.
யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்! என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.– திருமதி. பிரேமலதா விஜயகாந்த். pic.twitter.com/sbzd0FDOX4
— Vijayakant (@iVijayakant) December 2, 2023

அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, “கேப்டன் நலமுடன் இருக்கிறார். இன்னும் இரண்டு நாட்களில் உங்களுக்கு நல்ல செய்தி வரும். அதனால்தான் நான்
கேப்டனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளேன். தயவுசெய்து வதந்திகளை பரப்பாதீர்கள். நம்பாதீர்கள்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.