கடந்த 1996 இல் வெளியான இந்தியன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சங்கர் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், எஸ் ஜே சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோரின் நடிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைத்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு சமீபத்தில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் இத்திரைப்படத்தின் ரிலீஸ் ஒரு சில காரணங்களால் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. எனினும் 2024 இல் படத்தை எப்படியாவது வெளியிடும் முயற்சியில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் இந்தியன் 3 திரைப்படமும் உருவாகி வருகிறது. எனவே அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 உள்ளிட்ட படங்களை வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். அதன்படி 2024 ஏப்ரல் மாதத்தில் இந்தியன் 2 திரைப்படமும் 2025 தீபாவளியை முன்னிட்டு இந்தியன் 3 திரைப்படமும் வெளியாகும் என்று சமூக வலைதளங்களில் பல தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் தான் 2024 ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே பெரும்பாலான படங்களின் ரிலீஸ் தேர்தல் காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. அதுபோல சங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 திரைப்படமும் ஒத்திவைக்கப்பட்டு மே மாதத்தில் திரையிடப்படும் என்று புதிய தகவல் கிடைத்துள்ளது.
ஏற்கனவே பிரபாஸ் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் கல்கி திரைப்படம் மே 9ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தியன் 2 திரைப்படமும் மே மாத போட்டியில் களமிறங்குமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். எனினும் இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.