Homeசெய்திகள்சினிமா'இந்தியன் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு!

‘இந்தியன் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.'இந்தியன் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு!

கமல்ஹாசன், சங்கர் கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். 1996 இல் வெளியான இந்தியன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நீண்ட வருடங்கள் கழித்து இந்த படம் ரிலீஸாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையவே இல்லை. அந்த வகையில் பல தடைகளை தாண்டி இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இப்படமானது ஜூன் மாதத்தில் வெளியாகும் என படக் குழுவினர் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படம் ஒரு சில காரணங்களால் ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் முதல் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 'இந்தியன் 2' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு!அதன்படி வருகின்ற மே 22ஆம் தேதி இதன் முதல் பாடல் வெளியாகும் என போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளனர். அந்த போஸ்டரில் இந்த பாடல் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த படம் 2024 ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து சித்தார்த், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, எஸ் ஜே சூர்யா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ