Homeசெய்திகள்சினிமாவிரைவில் நேரு அரங்கில் இந்தியன்2 இசை வெளியீட்டு விழா... ஸ்டார் நடிகர்கள் பங்கேற்பு...

விரைவில் நேரு அரங்கில் இந்தியன்2 இசை வெளியீட்டு விழா… ஸ்டார் நடிகர்கள் பங்கேற்பு…

-

இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996-ம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாகி ஏகபோக வரவேற்பை பெற்ற திரைப்படம் இந்தியன். இப்படத்தில் கமல்ஹாசன், சுஹாசினி, கவுண்டமணி, மனிஷா கொய்ராலா, செந்தில், கஸ்தூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் சுமார் 50 கோடி ரூபாய் வசூல் செய்தது.

இதைத் தொடர்ந்து தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. இத்திரைப்படத்தையும் ஷங்கர் இயக்க கமல்ஹாசன் நடித்திருக்கிறார். படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், விவேக், மனோபாலா, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மற்றும் லைகா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளன.

இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்திலிருந்து பாரா என்ற முதல் பாடல் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி சென்னை நேரு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகனும் நடிகருமான ராம்சரண் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனராம். மேலும், ரஜினிகாந்தும் இந்த விழாவில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

MUST READ