Homeசெய்திகள்சினிமாஓடிடியில் வெளியான 'இந்தியன் 2'.... தாத்தாவை கதறவிடும் நெட்டிசன்கள்!

ஓடிடியில் வெளியான ‘இந்தியன் 2’…. தாத்தாவை கதறவிடும் நெட்டிசன்கள்!

-

- Advertisement -

கடந்த 1996 இல் ஷங்கர், கமல் கூட்டணியில் வெளியான இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் பல வருடங்கள் கழித்து இந்தியன் 2 திரைப்படம் உருவாகி இருந்தது. ஓடிடியில் வெளியான 'இந்தியன் 2'.... தாத்தாவை கதறவிடும் நெட்டிசன்கள்!இந்த படம் ஆனது மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் கடந்த ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் எந்த விதத்திலும் பூர்த்தி செய்யவில்லை எனவும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் படத்தின் பட்ஜெட்டை பாதி கூட எடுக்கவில்லை எனவும் பலரும் படத்தை விமர்சித்து வந்தனர். இந்நிலையில் இந்த படம் நேற்று (ஆகஸ்ட் 9ஆம் தேதி) நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது. ஓடிடியில் வெளியான 'இந்தியன் 2'.... தாத்தாவை கதறவிடும் நெட்டிசன்கள்!படத்தில் அப்படி என்னதான் செய்து வைத்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள பலரும் இந்தியன் 2 திரைப்படத்தை ஓடிடியில் பார்த்து வருகின்றனர். அதேசமயம் நெட்டிசன்கள் பலரும் இந்தியன் 2 திரைப்படத்தை கலாய்த்து மீம்ஸ்களை அள்ளி விடுகின்றனர். இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் பல கெட்டப்புகளில் படித்திருக்கும் நிலையில் ஒவ்வொரு கெட்டப்பையும் ஒவ்வொரு விதமாக கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். மேலும் படத்தில் இருக்கும் குறைகளையும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.ஓடிடியில் வெளியான 'இந்தியன் 2'.... தாத்தாவை கதறவிடும் நெட்டிசன்கள்!

சேனாபதி தாத்தா என்று சொன்னாலே எல்லோரிடமும் ஒரு வைப் உருவாகும். ஏ ஆர் ரகுமான் இந்தியன் படத்திற்காக கொடுத்தேன் பின்னணி இசையும் அப்படித்தான்.
ஆனால் இந்தியன் 2 ன்னு சொல்லி தாத்தாவை கூட்டிட்டு வந்து இப்படி வச்சு செஞ்சிட்டிங்களே என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். அதாவது இந்தியன் 2 படத்தின் மூலம் தாத்தா வந்து கதற விடப் போகிறார் என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது தாத்தாவையே கதற விடுகிறார்கள் நெட்டிசன்கள்.

MUST READ