இந்தியன் 2 படத்தில் கதாபாத்திரம் குறித்து பேசிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்
- Advertisement -
நடிகை ரகுல் ப்ரீத் சிங், இந்தியன் 2 திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து பேசியிருக்கிறார்.

ரகுல் ப்ரீத் சிங் அறிமுகமான திரைப்படம் இந்தியில் என்றாலும், அவர் தென்னிந்தியாவில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். தமிழில் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக என்னமோ ஏதோ படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்திருந்தார். எச்.வினோத் இயக்கிய தீரன் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் வெற்றி ரகுல் ப்ரித் சிங்கிற்கு பட வாய்ப்புகள் அள்ளிக் கொடுத்தன. தமிழில் சூர்யாவுடன் என்.ஜி.கே., கார்த்தியுடன் தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இறுதியாக ரகுல் நடிப்பில் தமிழில் அயலான் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் அவர் பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ஷங்கர் இயக்கியிருக்கும் இந்தியன் இரண்டாம் பாகத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கிறார். படத்தில் தன் கதாபாத்திரம் குறித்து பேசிய ரகுல், இந்தியன் 2 திரைப்படம் என் திரை வாழ்வில் மிகவும் முக்கியமான திரைப்படம் என்றும், இப்படத்தில் தனது கதாபாத்திரம் மிகவும் வலிமை வாய்ந்ததாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். படத்தில் நடித்தது குறித்து தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.