spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'இங்க நான் தான் கிங்கு' படத்தின் புதிய பாடல் வெளியீடு!

‘இங்க நான் தான் கிங்கு’ படத்தின் புதிய பாடல் வெளியீடு!

-

- Advertisement -

சந்தானம் நடிக்கும் இங்க நான் தான் கிங்கு படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். 'இங்க நான் தான் கிங்கு' படத்தின் புதிய பாடல் வெளியீடு!இவர் கடைசியாக வடக்குப்பட்டி ராமசாமி என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் இங்க நான் தான் கிங்கு எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சந்தானத்துடன் இணைந்து தம்பி ராமையா, விவேக் பிரசன்னா , பிரியாலயா, முனீஸ் காந்த், பால சரவணன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தை இந்தியா பாகிஸ்தான் பட இயக்குனர் ஆனந்த் நாராயணன் இயக்கியுள்ளார். இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க டி இமான் இதற்கு இசை அமைத்துள்ளார். ஓம் நாராயண் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

we-r-hiring

இதற்கிடையில் இந்த படமானது வருகின்ற மே 10ம் தேதி வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படமானது வருகின்ற மே 17 அன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் மாலு மாலு எனும் புதிய பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

MUST READ