spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாட்ரெண்டை மாற்றிய லோகேஷ் கனகராஜ்..... இனிமேல் ஆல்பம் பாடல் வெளியீடு!

ட்ரெண்டை மாற்றிய லோகேஷ் கனகராஜ்….. இனிமேல் ஆல்பம் பாடல் வெளியீடு!

-

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் மாநகரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அடி எடுத்து வைத்தார். அதைத் தொடர்ந்து கைதி படத்தை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ட்ரெண்டை மாற்றிய லோகேஷ் கனகராஜ்..... இனிமேல் ஆல்பம் பாடல் வெளியீடு!பின்னர் மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ட்ரெண்டிங் இயக்குனராக வலம் வருகிறார். பொதுவாக இவருடைய படங்கள் பெரும்பாலும் ஆக்சன் காட்சிகள் நிறைந்து காணப்படும். ரொமான்ஸ் காட்சிகள் மிகவும் குறைவாகவே இடம்பெற்றிருக்கும். இதன் மூலம் முரட்டு சிங்கிள் லோகேஷ் என்று தான் ரசிகர்களால் அறியப்பட்டார். ஆனால் தற்போது லோகேஷ் தன்னுடைய டிரண்டை மாற்றி ரொமான்ஸ் ட்ராக்கில் இணைந்துள்ளார். அதன்படி லோகேஷ் கனகராஜ், நடிகை ஸ்ருதிஹாசனுடன் இணைந்து இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். இந்தப் பாடலின் வரிகளை கமல்ஹாசன் எழுதியுள்ள நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

we-r-hiring

மேலும் இந்த பாடலுக்கு ஸ்ருதிஹாசன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இந்த ஆல்பம் பாடல் தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த பாடலில் இருவருக்கும் இடையிலான காதலும் அதன் பின் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிரிவுகளும் சொல்லப்படுகிறது. இந்தப் பாடல் 2k கிட்ஸ் ரசிக்கும்படியான ஸ்டைலிஷான பாடலாக அமைந்துள்ளது.

MUST READ