அமரன் படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. எனவே சிவகார்த்திகேயன் கோவா புறப்பட்டு செல்கிறார்.

கடந்த ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை ‘ரங்கூன்’ படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் இந்திய அளவில் ஏகபோக வரவேற்பை பெற்றது.
படத்தில் நடித்த சிவகார்த்திகேயனும், சாய் பல்லவியும் அந்தந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்றனர். மேலும் கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான இந்த படமானது ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் ‘அமரன்’ திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அதாவது வருகின்ற நவம்பர் 20 முதல் நவம்பர் 28ஆம் தேதி வரை கோவாவில் நடைபெற இருக்கும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தங்கமயில் விருதுக்கு ‘அமரன்’ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் கோவா புறப்பட்டு செல்கிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் கோவா புறப்படும் சிவகார்த்திகேயனை பார்த்து ரசிகர்கள் அவரை உற்சாகப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


